'அறிவுரை கூறிய தாய்க்கு நேர்ந்த கொடூரம்'... 'ஆத்திரத்தில் பட்டதாரி இளைஞர் செய்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 26, 2019 03:17 PM

கோவை அருகே வேலைக்கு செல்லுமாறு தாய் கூறியதால், ஆத்திரமடைந்த மகன், தாயை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth arrested for killing his mother pollachi

பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலாம்பட்டி செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது கணவர் பெருமாள்சாமி 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் மௌன குருசாமி பி.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போகுமாறு செல்லம்மாள், தனது மகன் மௌனகுருசாமிக்கு அறிவுரை கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை செல்லம்மாள், மௌனகுரு சாமியிடம் வேலைக்கு செல்லுமாறு மீண்டும் அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மௌனகுருசாமி, தனது தாயை சுவற்றின் மீது தள்ளிவிட்டுள்ளார். பின்னர மரக் கட்டையை எடுத்து தனது தாயின் தலையிலேயே, மௌனகுருசாமி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் தாய் செல்லம்மாள் துடிதுடித்து உயிரிழந்தார். தாயைக் கொலை செய்து விட்டு மெளனகுருசாமி வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். 

செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் செல்லம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மௌனகுரு சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை ஆத்திரத்தில், தான் தள்ளி விட்டு சென்று விட்டதாக மெளன குரு காவல்துறையினரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

Tags : #ATTACK #MURDER #MOTHER #SON #ARRESTED