சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்.. வீடியோவால் ஏற்பட்ட விரோதம்தான் காரணமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 22, 2019 10:55 AM

தலைநகர் டெல்லியில் ஜிம் பயிற்சியாளராக உள்ள மொஹித் என்பவர் நேற்று மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

TikTok celebrity and gym trainer Mohit Mor shot dead near Delhi

கொல்லப்பட்ட மொஹித் என்பவர் வீடியோ பதிவிடும் செயலியான டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வந்த இவரை டிக்டாக்கில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

நேற்று மாலை வழக்கமாக செல்லும் ஜிம் அருகில் ஒரு கடையில் இருந்தவரை திடீரென வந்த அடையாளம் தெரியாத 3 பேர் சுட்டுக் கொன்றுள்ளனர். அருகில் இருந்த சிசிடிவியில் அவர்கள் பதிவாகியது தெரிய வந்துள்ளது. அதில் 2 பேர் ஹெல்மெட் அணிந்துள்ளனர். ஒருவருடைய முகம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தனது தனிப்பட்ட எதிரிகளை விமர்சிக்கும் வகையில் சில டிக்டாக் வீடியோக்களை மொஹித் பகிர்ந்துள்ளார். அதன் காரணமாகவும் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவருக்கு குற்றப்பின்னணி எதுவும் இல்லாததால், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இது நடந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : #TIKTOK #CELEBRITY #MURDER