'சரமாரியாக தாக்கப்பட்ட தலைவர்'... 'அதிர வைத்த வீடியோ!'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 22, 2019 01:06 PM

செய்தியாளர் சந்திப்பின்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு சமிதி தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dalit body president attacked during press conference in Hyderabad

தெலுங்கானா மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கான சமூக மற்றும் பழங்குடியின நலவாழ்வுத்துறை குருகுல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதுதொடர்பாக தேசிய பட்டியல் இன பரிரக்ஷானா சமீதி தலைவர் கர்னே ஸ்ரீசைலம் நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பட்டியல் இனத்தவருக்கான பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவர் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். கர்னே ஸ்ரீசைலம் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரஸ் கிளப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், ஸ்ரீசைலத்தை சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஸ்ரீசைலம் தப்பித்து வெளியே ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல், சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

இந்தக் காட்சிகளை செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் தங்களின் செல்போனிலும், கேமராக்களிலும் படம் பிடித்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஒரு அமைப்பின் தலைவர் மீது பிரஸ் மீட்டிலேயே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஸ்ரீசைலம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீசைலமும் அவரது நண்பர்களும் தங்களை தாக்கியதாலேயே தாங்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக பேராசிரியார் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : #ATTACK #VIRALVIDEO #OSMANIAUNIVERSITY