‘தினமும் 40 முறை போன் செய்து தொந்தரவு’.. இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. வசமாக சிக்கிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | May 17, 2019 01:10 PM

இளம் பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இந்திய வாலிபருக்கு லண்டன் நீதிமன்றம் 29 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

Indian man jailed for following the woman in UK

இந்தியாவை சேர்ந்த ரோகித் சர்மா என்பவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 மாதத்துக்கு முன் ஒரு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் இளம் பெண் ஒருவரை சந்தித்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை பின் தொடர்வதை வேலையாக செய்து வந்துள்ளார்.

மேலும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியும் உள்ளார். இதையடுத்து, அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், புகாரை விசாரித்த புலனாய்வு அதிகாரி நிகோலா கெர்ரி கூறுகையில் “அந்த பெண் 2017 ஆம் ஆண்டு கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு அந்த பெண் வேலையை மாற்றியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்து அந்த பெண்ணுக்கு தினமும் 15 முறை போன் செய்துள்ளார். இதையடுத்து, சர்மாவின் தொல்லை தாங்காமல் அந்த பெண் மற்றொரு வேலைக்கு மாறியுள்ளார். மேலும் அதையும் கண்டு பிடித்து தினமும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்மாவுக்கு 29 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Tags : #LONDON #INDIAN #MAN #ARRESTED