தந்தையை கொன்று 25 துண்டுகளாக வெட்டிய மகன்..! போலிஸில் மகன் அளித்த பகீர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 22, 2019 10:33 PM

தந்தை கொன்று 25 துண்டுகளாக வெட்டி மறைக்க முயன்ற மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Delhi youth killed his father and chopped his body into 25 pieces

டெல்லியில் 45 வயதான சந்தீஷ் அகர்வால் என்பவர் குடும்த்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்தமகன் அமன் என்பவருடன் தந்தை சந்தீஷுக்கு அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை செல்லவே, சந்தீஷ் தனது சொத்தில் பாதியை மனைவி மற்றும் மகன்களுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சந்தீஷ் வசமிருந்த காஸ்மெட்டிக் கடை தனக்கு எழுதிவைக்கும்படி மூத்தமகன் அமன் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தனது தந்தை சந்தீஷை மூத்தமகன் அமன் கொலை செய்துள்ளார். இதனை அடுத்து சந்தீஷை 25 துண்டுகளாக வெட்டி நண்பகர்களுடன் சேர்ந்து மறைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது வந்த காவல் துறையினர் அமனை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அமனிடம் போலிஸார் நடத்திய விசாரணையில்,‘அவர் தினமும் திட்டிக்கொண்டே இருந்தார். அதனால் கோபத்தில் அவரை கொலை செய்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் சந்தீஷின் மனைவி மற்றும் மற்றொருமகன், மகளிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #DELHI #FATHER #SON #KILLED #BIZARRE