‘தூங்கிட்டு இருந்த பிஞ்சு குழந்தையை தண்ணித்தொட்டியில் வீசிய தாய்’.. விசாரணையில் அதிரவைத்த தாய் கூறிய காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 22, 2019 03:49 PM

தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தாய் தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan Woman allegedly drowns her 6 month old son in water tank

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற பகுதியில் வசித்து வருபவர் சீதாராம் குஜ்ஜர். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபிகா குஜ்ஜர். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு மீண்டும் தாய் தீபிகா தூங்கியுள்ளார். நள்ளிரவில் திடீரென விழித்துப் பார்த்த கணவர் சீதாராம் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து குடும்பத்தினர் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து தீபிகாவும் தேடியுள்ளார். கடைசியாக தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மிதந்ததைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர். இது குறித்து போலிஸாரிடம் புகார் அளிக்கவே, அவர்கள் தீவிர வீசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது தீபிகா முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் தூக்கத்தில் தெரியாமல் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசியதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தீபிகாவை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தம்பதியனருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #MOTHER #BABY #BIZARRE