கணவரையும் ஒரு வயது குழந்தையையும் கொன்று புதைத்துவிட்டு காணவில்லையென நாடகமாடிய மனைவி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 17, 2019 04:23 PM

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே தீபிகா (20) என்ற இளம்பெண் தன்னுடைய கணவரையும் ஒரு வயது குழந்தையையும் காணவில்லையென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

women murdered her husband and one year old baby

பின்னர் விசாரணையில் அந்தப் பெண் முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்துள்ளார். இதனால் அவர்மீது சந்தேகம் அடைந்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், அவரே கணவர் ராஜா (25) மற்றும் குழந்தை பிரனீஷைக் கொன்று ஏரிக்கரையில் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜா, தீபிகா இருவரும் காதலித்துத் திருமணம் செய்துள்ளனர். கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்ததால் வேறுவழியின்றி கொலை செய்ததாகவும், கொலையாளியின் பிள்ளை என பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

தனியாளாக தீபிகா மட்டுமே இருவரைக் கொன்று புதைத்திருக்க முடியாது என சந்தேகிக்கும் போலீஸார் வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

Tags : #WIFE #MURDER #HUSBAND #BABY