'நீ எனக்கே இடைஞ்சலா இருக்கியா'?... 'தோசை கரண்டி'யை வைத்து... 'பெற்ற தாய்' செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 22, 2019 10:23 AM

இந்த சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,என்ற கேள்வியை நமக்கு எழுப்பி கொண்டிருக்கிறது தினம் தினம் நடக்கும் சம்பவங்கள்.அதற்கு மேலும் ஒரு உதாரணமாக,சென்னையில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசையாய் வளர்த்த மகனை கரண்டியால் அடித்து கொன்ற தாயின் செயல், அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க செய்துள்ளது.

Chennai woman arrested for killed her 3 years old son

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தம்பதிகள் சோமசுந்தரம் மற்றும் புவனேஸ்வரி.இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில்,கிஷோர் என்ற மகனும் உள்ளார்.கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை நிலவி வந்த நிலையில்,கருத்து வேறுபாடு முற்றியதால்,கணவனை பிரிந்த புவனேஸ்வரி,சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்தார்.இதனிடையே திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் முறையற்ற உறவாக மாறியுள்ளது.இது மகன் கிஷோருக்கு தெரியவர,அது இருவருக்கும் இடைஞ்சலாக மாறியுள்ளது.

புவனேஸ்வரியை தேடி கார்த்திகேயன் எப்போதெல்லாம் வீட்டிற்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் கிஷோர் அவரை கண்டு பயந்து சத்தம் போட்டு அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளான்.இதனால் ஆத்திரமடையும் புவனேஸ்வரி கிஷோரை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.அவ்வாறு  கடந்த 19ஆம் தேதி வீட்டிற்கு வந்த  கார்த்திகேயனை பார்த்து கிஷோர் மீண்டும் பயங்கரமாக அழுதுள்ளான். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற புவனேஸ்வரி,தோசை கரண்டியால் கிஷோரை தாக்கியுள்ளார். அதில் கிஷோருக்கு தொண்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான்.

இதனை சற்றும் எதிர்பாராத புவனேஸ்வரி,மகன் கிஷோரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிஷோர் இறந்து விட,கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் சிறுவனின் கொலையை மறைக்க முடிவெடுத்தனர்.இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிஷோரின் உடலை திருவாரூர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது புவனேஸ்வரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது தாய் புஷ்பா,பேரனுடன் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதனால் பதற்றமடைந்த புவனேஸ்வரி,கிஷோருக்கு அடிபட்டுள்ளதாகவும், அவனை திருவாரூக்கு அழைத்து வருவதாகவும் கூறி சமாளித்துள்ளார்.

இதையடுத்து திருவாரூர் வந்து பேரனை பார்த்தபோது,கிஷோர் உயிரிழந்திருப்பதை கண்டு புஷ்பா அதிர்ச்சி அடைந்தார்.இதனிடையே பேரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த அவர்,திருவாரூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிஷோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.மேலும் சம்பவம் நடந்த பகுதி அம்பத்தூர் என்பதால், உயிரிழந்த சிறுவன் கிஷோர் மற்றும் தாய் புவனேஸ்வரி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் அம்பத்தூர் போலீசாரிடம், திருவாரூர் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து இருவரிடமும் அம்பத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது புவனேஸ்வரி கூறிய தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்தது.''எனது முறையற்ற உறவுக்கு மகன் கிஷோர் இடையூறாக இருந்ததால் அவனை அடித்து கொன்றதாக''அவர் தெரிவித்துள்ளார்.

தனது முறையற்ற உறவிற்காக பெற்ற பிள்ளையையே அடித்து கொன்ற தாயின் செயல் அம்பத்தூர் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.'பிள்ளைகளை கோபத்தில் தவறாக அடித்து விட்டாலே கதறி அழும் தாய்மார்கள் மத்தியில்,புவனேஸ்வரிக்கு எப்படி இது போன்ற பாதக செயலை செய்ய மனசு வந்துதோ' என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Tags : #MURDER #TAMILNADUPOLICE #CHENNAI WOMAN #AMBATTUR POLICE #BHUVANESHWARI #KISHORE