'ஃபேஸ்புக் லைவ் பண்ணனுமா'... 'அப்ப நீங்க இத எல்லாம் கடைப்பிடிக்கணும்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | May 15, 2019 07:08 PM

துப்பாக்கிச்சூடு சம்பவம் நேரலை செய்யப்பட்டதை அடுத்து, நேரலை வசதியில் பேஸ்புக் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

facebook changes livestream rules after new zealand shooting

நியூசிலாந்து - கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 -ம் தேதி, காரிலிருந்து சென்ற ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை அவர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டார். துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய நபர், அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலகநாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு, நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து, பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பேஸ்புக் அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #FACEBOOK #LIVE #ATTACK