“என்னோட திறமையை காட்டத்தான் அப்படி செஞ்சேன்”!.. ‘நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த டாக்டர் அதிர்ச்சி தகவல்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | May 17, 2019 12:19 PM

தனது மருத்துவ திறமையை காட்ட 17 நோயாளிக்குக்கு விஷம் கொடுத்ததாக பிரான்சில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

french doctor arrested for killing 17 patients by giving poison

கிழக்கு பிரான்சை சேர்ந்த 43 வயதாகும் ஃபெடரிக் பெச்சியர் என்பவர் மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்ய சென்ற தனது சக மருத்துவர்களின் மருத்துவ உபரகரணத்தில் விஷத்தை ஏற்றியதால் 9 நோயாளிகள் உயிரிழந்ததாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டாலும், ஃபெடரிக் மருத்துவ தொழிலில் தொடர்ந்து ஈடுபட கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 17 நோயாளிகள் இதே போன்ற சம்பவத்தால் உயிரிழந்துள்ளதால் மீண்டும் ஃபெடரிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது விஷம் ஏற்றப்பட்ட உபகரணங்களால் நோயாளிகள் ஆபத்தான் நிலைக்கு செல்லும் போது, அவர்களை காப்பாற்றி தனது மருத்துவ திறமையை காட்ட இது போன்று அவர் செய்ததாக சக மருத்துவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஃபெடரிக் மறுத்துள்ளார்.

Tags : #FRENCH #DOCTOR #ARRESTED #POISON