மகனின் காதலுக்கு உதவியதால் நிகழ்ந்த பரிதாபம்.. சரமாரியாக குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 22, 2019 06:31 PM

கரூரில் மகனின் காதல் பிரச்சனையில் அவரது அப்பா குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

father killed for supporting sons love in karur

கரூர் மாவட்டம் கம்மநல்லூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் மணிவண்ணன் (25), அதே பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து என்பவரது மகள் கீர்த்தனாவை (18) காதலித்து வந்துள்ளார். இது வீட்டாருக்கு தெரியவர அது இரண்டு குடும்பத்துக்கும் இடையேயான தகராறாக மாறியுள்ளது. சமீபத்தில் கீர்த்தனாவிற்கு செல்ஃபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் மணிவண்ணன். இதையறிந்த பெண்ணின் அப்பா அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது சண்டை பெரிதாக ஆத்திரமடைந்த பிச்சமுத்து பரமசிவத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

படுகாயமடைந்த பரமசிவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிச்சமுத்து மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தம்பி  முருகானந்தம் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #LOVE #MURDER #FATHER