VIDEO: புடிச்சிட்டேன்.. 'பின்னால' போங்க.. பக்கத்துல வராதீங்க.. ஏன் 'இந்த' கொலைவெறி?

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Oct 16, 2019 10:24 PM

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் போட்டி போட்டுகொண்டு வைரலாகும். ஆர்வமாக நாம் தேடிச்சென்று பார்த்தால் அந்த வீடியோவில் பிரமாதமாக ஒன்றும் இருக்காது. அதுபோல ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Man pulls out ‘snake’ from grass field, Video goes viral

நன்றாக வளர்ந்த நெற்பயிர்கள் ஓரத்தில் மூவர் நிற்க அதில் நடுத்தர வயதுடைய ஒருவர் வயல் ஓரத்தில் கையை விட்டுக்கொண்டு, ஏதோ பிடிப்பது போல பாவனை செய்கிறார். பக்கத்தில் நிற்கும் இருவர் ஆர்வமாக அவரைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

பின்னால போங்க, வராதீங்க என சைகையில் சொல்லிக்கொண்டு கையில் அகப்பட்டதை பிடித்து மேலே தூக்குகிறார். எல்லாரும் ஆர்வமாக பாம்பு என பார்க்க அவர் கையில் பிடித்து மேலே தூக்கியது ஒரு பெல்ட். இதுவரை இந்த வீடியோவை 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

Tags : #VIDEO