தம்பி.. நீ படிச்ச ஸ்கூல்ல.. நான் ஹெட்மாஸ்டர்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Oct 14, 2019 10:35 PM
சில வீடியோக்கள் பார்க்கும்போதே நம்மை கவர்ந்து இழுத்து விடும். பெரும்பாலும் விளையாட்டுகளில் பயன்படுத்தும் சிலபல டிரிக்குகள், ஸ்மார்ட் மூவ்கள் நம்மை சிரிக்க வைத்துவிடும். அந்தவகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் செம வரவேற்பைப் பெற்று வருகிறது.
Legend 😂👌pic.twitter.com/wi3ZEpddWy
— CCTV IDIOTS (@cctv_idiots) October 13, 2019
வீடியோவில் முதியவர் ஒருவர் மிகவும் இளம்வயது வாலிபன் ஒருவனுடன் பேஸ்கட் பால் விளையாடுகிறார். அப்போது பந்தை தட்டித்தட்டி எடுத்து செல்லும் அவர் ஒருகட்டத்தில் பந்தை வீசுவது போல பாவனை செய்ய, இளைஞன் ஏமாந்து போய் விடுகிறான்.பின்பு நிஜமாகவே பந்தை தூக்கிப்போடுகிறார். அது கரெக்டாக சென்று கூடையில் விழுகிறது.
அவனது வயதுக்கு அவரால் ஓட முடியாது என்றாலும், அந்த பெரியவர் செய்த டிரிக் அனைவரையும் கவர்ந்து விட, தற்போது வரையில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.