'பசங்க' நல்லா வெளையாடனும்.. பெண் ஊழியரை 'நியமித்த' டீம்.. காரணத்தை 'மட்டும்' கேட்காதீங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 17, 2019 11:11 PM

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடவுள்ள, 13-வது ஐபிஎல் போட்டியின் ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்த அணிகளும் பல்வேறு பிரயத்தனங்களை செய்து வருகிறது.

IPL 2020: RCB to become first IPL team to have a woman in support staf

இந்த நிலையில் பெங்களூர் அணி வீரர்கள் நன்றாக விளையாடவும், அவர்கள் உடல் தேர்வில் கவனம் செலுத்தும் வகையிலும் பெண் ஊழியர் ஒருவரை நியமித்துள்ளது. நவ்னிதா கவுதம் எனும் அவர் மசாஜ் நிபுணர் ஆவார். பெங்களூரு அணியின் வீரர்களின் உடல் தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவார்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஊழியர் ஒருவர் இடம் பெற்றுள்ளது இந்த அணியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.