பாரா ஜம்பிங்.. பல்லாயிரம் 'அடியுயரத்தில்' பறந்தபோது.. தவறி 'விழுந்த' வாலிபர்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Oct 15, 2019 07:19 PM

உலகம் முழுவதும் பிரபலமான பாரா ஜம்பிங் சாகச விரும்பிகளுக்கு ஏற்றதொரு விளையாட்டு. திரில், திகில் எல்லாம் கலந்து இருப்பதால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இந்த சாகசத்தை விரும்பி ஏற்கின்றனர். அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்ந்தாலும் இதன் மீதுள்ள காதல் மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

The young man fell down during the para jumping, video goes viral

அந்தவகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் இளைஞர்கள் இருவர் பாரா ஜம்பிங் செய்ய அவர்களுடன் பயிற்சியாளர் ஒருவரும் உடன் செல்கிறார். பல்லாயிரக்கணக்கான அடியுயரத்தில் பறந்தபோது அதில் ஒருவர் தவறி கீழே விழுகிறார். படுவேகமாக கீழே விழும் அவர் தரையைத் தொடப்போகும் நேரத்தில், டக்கென அவர் வைத்திருந்த பாராசூட் வேலைசெய்ய மனிதர் பிழைத்துக் கொண்டார்.

இந்த வீடியோவை இதுவரை சுமார் 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது. 

Tags : #VIDEO #PARAJUMPING