'இது மிருகநேயம் கூட இல்ல'.. 'அலறித்துடிக்கும் குரங்கு, நாய், பூனை'.. ஆய்வுக்கூடத்தில் துன்புறுத்தப்படும் வீடியோ கசிந்தது'.. 'உலகை உலுக்கிய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 16, 2019 11:52 AM

மருந்துகளை பிரயோகித்துப் பார்ப்பதற்காக விலங்குகளை துன்புறுத்தும் ஆய்வுக்கூடத்தின் செயல்கள் வீடியோக்களாக வலம் வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

german lab tortures animals in the name of test video leaked

ஜெர்மனியில் இயங்கிவரும் சோகோ என்கிற அமைப்பின் கீழ் மருந்தியல் மற்று நச்சுயியல் துறைக்கான் ஆய்வுக்கூடத்தில் மருந்துகளை மனிதர்களுக்காக உற்பத்தி செய்யும் முன்பாகவே அவற்றை நாய், பூனை, குரங்கு முதலானவற்றுக்கு கொடுத்து அவற்றின் தன்மைகள் என்னாகின்றன என்கிற விளைவுகளை கண்டறியும் பேரில் அவை துன்புறுத்தப்படுவதாக, அந்த ஆய்வுக்கூடத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உலகையே உலுக்கி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், விலங்குகள் நல ஆர்வலர்களூம், இன்னும் சில சமூகப்போராளிகளும் இணைந்து இந்த ஆய்வுக்கூடத்தை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஐரோப்பிய யூனியனின் விலங்குகள் நல விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும் இந்த ஆய்வுக்கூடத்தின் நிர்வாக அமைப்பின் மீது பெட்டிஷன் போட்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இந்த வகை துன்புறுத்தல்களால் அந்த விலங்குகள் சுறுசுறுப்பை இழந்தும், ரத்தக்கசிவு ஏற்பட்டும், சாகும் நிலைக்கு தள்ளப்பட்டும் கிடக்கிற புகைப்படங்களை அதே ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் சிலர் ரகசியமாக எடுத்து வெளிவிட்டதை அடுத்து, இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

குறிப்பு: வீடியோக்களின் தன்மை கருதி அவை இங்கு இணைக்கப்படவில்லை.

Tags : #LAB #HEARTBREAKING #TORTURE #ANIMALS #GERMAN #VIDEO