‘கணவர் வீட்டார் மறுத்ததால்’... ‘பெண் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘பரிதவிக்கும் குழந்தைகள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 27, 2019 10:46 AM

நெல்லை அருகே 7 ஆண்டுகளாக போராடியும், கணவன் வீட்டார் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்து பெண் செய்த காரியம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman who committed suicide by not building toilet

களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஷாலினிக்கும், கிறிஸ்துராஜபுரத்தைச் சேர்ந்த சசிகுமாருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்து வந்தது முதலே வீட்டில் கழிவறை கட்டித் தர வேண்டும் என கணவன் சசிக்குமாரிடம் ஷாலினி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

7 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வந்த சசிக்குமாருடனும், அவரது தந்தையுடனும், இது தொடர்பாக அவ்வப்போது ஷாலினி சண்டை போட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரச்சனை எழுந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஷாலினி, அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கணவன் வீட்டார், அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டார், ஷாலினியை, அவரது கணவரும், மாமனாரும் அடித்துக் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் வரும் நாயகி கதாபாத்திரத்தை போன்று, தன் மனவலியை சொல்லியும், கணவன் வீட்டார் நடவடிக்கை எடுக்காததால், பெண் எடுத்த விபரீத முடிவால், குழந்தைகள் தற்போது தாயை இழந்து தவிக்கின்றனர்.

Tags : #SUICIDE #NELLAI #TOILET #JOKER