நியூ இயர் 'பார்ட்டி'யில்... 'சிங்கிள்ஸ்க்கு' நோ அனுமதி... ஸ்டிரிக்ட் 'ஆர்டர்' போட்ட போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 23, 2019 07:57 PM

2019- வருடம் முடிவுற இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமுள்ளன. புத்தாண்டு புது ஆண்டாக மட்டும் இல்லாமல் வருடம் முழுவதும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கை காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும், புத்தாண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

No Singles Allowed at New Year\'s parties, Says Police

குறிப்பாக பெருநகரங்களில் வசிக்கும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் புத்தாண்டு பார்ட்டிக்காக வெயிட்டிங்கில் இருக்கின்றனர். இந்தநிலையில் புத்தாண்டு பார்ட்டிகளில் சிங்கிளாக வரும் ஆண், பெண்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஹைதராபாத் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இரவு 8 மணியில் இருந்து 1 மணிவரை மட்டுமே பார்ட்டிகள் நடக்க வேண்டும் என்றும் பார்ட்டிகளில் போதைப்பொருட்களுக்கு அனுமதி இல்லை என்றும், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.