'தூக்கத்தில்' இருந்த மனைவிக்கு... கணவரால் நேர்ந்த... 'நடுங்க' வைக்கும் 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 30, 2020 07:55 PM

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி விமலா. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார்.

Wife who slept in night get beaten by her husband

சங்கர் மற்றும் விமலா ஆகியோருக்கு கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டை விட்டு நீண்ட நேரமாகியும் சங்கர் மற்றும் விமலா ஆகியோர் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சங்கரின் வீட்டில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் விமலா சடலமாக கிடந்துள்ளார். அதனருகில், சங்கரும் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். குழந்தையும் அருகில் அழுதுகொண்டே இருந்தது.

இதைக் கண்டதும் பதறிப் போன அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் விமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில்  சுயநினைவு திரும்பிய பின் சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு சங்கர் மற்றும் விமலா ஆகியோர் உறங்க சென்றுள்ளனர். அப்போது கணவர் சங்கரின் ஆசைக்கு இணங்க விமலா மறுத்துள்ளார். இதனால் இரவு நேரத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முடிந்த பின் விமலா தூங்கியுள்ளார். சங்கரும் கோபத்துடன் படுத்துள்ளார். இதனையடுத்து அதிகாலை வேளையில் விமலா குறட்டை விட்டதாக தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த சங்கர், குறட்டை சத்தத்தால் தனது தூக்கம் தொலைந்து போனதாக கூறி கோபத்தில் பாறாங்கல்லை தூக்கி மனைவியின் முகத்தில் போட்டுள்ளார்.

இதில் அங்கேயே துடிதுடித்து விமலா உயிரிழந்துள்ளார். உயிரோடு இருந்தால் தானும் சிக்கி விடுவோம் என்று கூறி அதே கல்லில் தலையை முட்டி தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. மனைவி குறட்டை விட்டதால் கோபமடைந்த கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.