'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 24, 2020 06:36 PM

கணவர் வீட்டில் இருக்கும் போதே பெண் ஒருவர் மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lockdown : 35 Years old Delh Woman Allegedly Kills In-Laws

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில் குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பல ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கவிதா. இவர் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாரோடு வசித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர்களுக்குள் சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் மற்றும் மருமகளுக்குள் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையே பிரச்னை பெரிதாக மருமகள் கவிதா, மாமியார் மற்றும் மாமனாரை கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கத்தியால் இருவரையும் கொடூரமாக கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோர சம்பவம் நடைபெறும் போது அவரது கணவர், மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் வீட்டின் படுக்கையறையில் இருந்த மாமனார் ராஜ்சிங் மற்றும் மாமியார் ஓம்வதி ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை நடந்த சமயம் கவிதாவின் கணவர் சதீஷ் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.