‘முன்விரோதம்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்.. மர்மகும்பலால் ‘சென்னை’ இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 22, 2020 12:26 PM

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai 24 year old youth murdered near Pallikaranai lake

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கு அருகே உள்ள கொட்டகையில் நேற்றிரவு கிரி (24) என்ற இளைஞரை மர்மகும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. அப்போது கிரியுடன் இருந்த ஆனந்தன் என்பவருக்கு காலில் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கிரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அரிவாள் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கிரியின் தம்பிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் தம்பிக்கும் சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தனிப்படை அமைத்து தப்பியோடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.