‘கர்ப்பிணி தங்கைக்காக’... ‘தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம்’... ‘அண்ணனுக்கும், கணவருக்கும் நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 21, 2020 11:40 PM

நாமக்கல் அருகே தங்கையிடம் செல்ஃபோனில் தவறாக பேசியதை தட்டிக்கேட்ட அண்ணனையும், கணவரையும் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

man murder in namakkal who to knock down the person

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி கரிய பெருமாள் கரட்டு புதூரைச் சேர்ந்தவர் கோழிப்பண்ணை தொழிலாளி கவுதம் (23). இவரது தங்கை கவுசல்யாவுக்கும் (21), அதேப்பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில், தற்போது கவுசல்யா கர்ப்பிணியாக உள்ளார். கவுசல்யா திருமணத்திற்கு முன்பு ராமச்சந்திரனை என்பவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கவுதமின் கோஷ்டிக்கும், ராமச்சந்திரனின் கோஷ்டிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் தெரிகிறது.

இந்நிலையில் ராமச்சந்திரன் செல்ஃபோனில் தொடர்பு கொண்டு கவுசல்யாவை தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கவுசல்யாவின் அண்ணன் கவுதம் மற்றும் கணவர் கோபி நேற்றிரவு, இதுகுறித்து ராமச்சந்திரன் கோஷ்டியிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, இரு கோஷ்டிக்கும் ஏற்பட்ட தகராறில், ராமச்சந்திரன் தனது கோஷ்டியுடன் சேர்ந்து, கவுதம் மற்றும் கோபியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை கல்லால் இவர்கள் தாக்க, ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் மனோஜ்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கவுசல்யாவின் அண்ணன் கவுதம் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, கணவர் கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் மற்றும் மனோஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ராமச்சந்திரனின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் பூவராகவனை தேடிவருகின்றனர்.