அவரோட மர்ம உறுப்பு 'கட்' ஆயிருந்துச்சு...! கொலைக்கான 'லீட்' அது தான்...! பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 27, 2020 08:26 PM

வயது வித்தியாசம் பார்க்காமல் தாயுடன் உறவு வைத்திருந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார் மாங்காட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

son murdered a man who had an affair with his mother

கடந்த 26-ம் தேதி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள செங்கல் சூளையில் ரஞ்சித் என்னும் 30 வயதான இளைஞர் ஒருவர் மாங்காடு அருகில் இருக்கும் செங்கல் சூளையில் இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். முதலில் ரஞ்சித் மணல் கடத்தலைத் தடுக்க இன்பார்மராக செயல்பட்டதால் தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்று கருதப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின் ரஞ்சித்தின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டதால் பெண் விவகாரம் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அந்தக் கோணத்தில் விசாரித்த போது தான் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவந்துள்ளன.

ரஞ்சித் என்பவர் தன் மனைவி அபிராமி மற்றும் இரு பெண் குழந்தைகளோடு மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ரஞ்சித்திற்கும், மலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவரின் தாயாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விமலின் தயார் ரஞ்சித்தை விட மிகவும் வயதில் மூத்தவர். தாயின் தகாத உறவை அறிந்த விமல் ரஞ்சித்குமாரின் பழக்கத்தை விடுமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித்தும் விமல் என்பவரின் தாயும் எப்போதும் போல் தங்களின் உறவை தொடர்ந்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு சூழலில் விமல் வீட்டிலேயே இருப்பதால் ரஞ்சித்தும் அவரின் அம்மாவும் ஊருக்கு ஒதுக்கு புறமாக சந்திக்க திட்டமிட்டு சென்றுள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள  முடியாத விமல் ரஞ்சித்தை  கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ரஞ்சித்குமாரை தனியாக ஊருக்கு வெளியே அழைத்துவரும்படி நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தான் ரஞ்சித்குமார் தன் நண்பர்களுடன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.

அதை அறிந்த விமல், தன் நண்பர்கள் பிரேம் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய மூவரும் சிகரெட் பிடிப்பது தொடர்பாக ரஞ்சித்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். தீடீரென பதுக்கி வைத்திருந்த அருவாளை எடுத்து சரமாரியாக மூவரும் ரஞ்சித் குமாரை தாக்கியுள்ளனர். அதிஷ்டவசமாக ரஞ்சித்குமாரின் நண்பர் தப்பிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் விமல், ரஞ்சித்தைக் கொலை செய்த பிறகு அவரின் மர்ம உறுப்பையும் துண்டித்தார். பின்னர் அங்கிருந்து மூன்று பேரும் தப்பி திருமழிசை பகுதியில் பதுங்கியிருந்தனர்.

இதையடுத்து, ரஞ்சித்தின் நண்பர் ஊருக்குள் சென்று நடந்த சம்பவத்தை எல்லாம் விளக்கியுள்ளார். அதையடைதது மாங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் ரஞ்சித்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போரூர் உதவி கமிஷனர் சம்பத், மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பொற்பாதம் ஆகியோர் தலைமையில் உள்ளனர்.

இந்த தாயின் தகாத உறவால் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER