'30-ந் தேதி' வரை 'மதுக்கடைகள்' திறக்கப்படாது 'பொதுமக்கள்' நலனே எங்களுக்கு 'முக்கியம்'... 'அமைச்சர் தங்கமணி தகவல்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 15, 2020 11:58 AM

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.

whin shops will not open until the 30th of this month

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாமக்கல் மாவட்டத்தில் 45 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே நேரில் சென்று விநியோகிக்கும் வகையில், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் 6 ஆயிரம் மெகாவாட் வரை மின்பயன்பாடு குறைந்து உள்ளதாக அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வருகிற 30-ந் தேதி வரை திறக்கப்படாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் நலனே எங்களுக்கு முக்கியம் எனக் குறிப்பிட்டார். .

முன்னதாக குமாரபாளையத்தில் பேட்டி அளித்த அவர், ‘கடந்த மாத மின்கட்டணத்தையே பொதுமக்கள் ஆன்லைனில் செலுத்தலாம். அவ்வாறு கட்ட தவறினாலும் மின்இணைப்பு துண்டிக்கப்படாது எனத் தெரிவித்தார்.