'சானிடைஸருக்கு' ஏற்பட்ட கடும் கிராக்கி... வேற வழி தெரியல...'வோட்காவை' கையிலெடுத்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 14, 2020 10:24 PM

சானிடைஸர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் அதற்கு பதிலாக, வோட்காவை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

Corona: Japan hospitals find way to beat Sanitiser Shortage

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைஸரையும் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் சானிடைஸர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சானிடைஸர்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அதற்கு பதிலாக ஆல்ஹகாலை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆல்கஹாலில் ஒருவகையான வோட்காவை தேர்வு செய்திருக்கும் ஜப்பான் அரசு, அதை தண்ணீரில் கலந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

ஜப்பானில் இதுவரை 7600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 129 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.