'இந்த' தேதிக்குப்பின் ஊரடங்கில்... சில 'கட்டுப்பாடுகள்' தளர்த்தப்பட வாய்ப்பு: பிரதமர் மோடி
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப்பின் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மோடி தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து மோடி,''வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் என்னென்ன தளர்வுகள் இருக்கக்கூடும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் விரைவில் அதுகுறித்து பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
