'கொரோனா' அறிகுறியுடன் தப்பி ஓடிய... 'டெல்லி' வாலிபரை வளைத்துப்பிடித்த காவல்துறை... எங்க 'பதுங்கி' இருந்துருக்காரு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய டெல்லி வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பினாலும் கூட அவர்களை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிய டெல்லி வாலிபர் நிதின் ஷர்மாவை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். நேர்முகத்தேர்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் டெல்லியில் இருந்து புதுச்சேரி வந்த நிதின் விழுப்புரத்தில் தங்கி இருந்துள்ளார்.அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அங்கிருந்த அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டது. ஆனால் சிகிச்சை முடிவுகள் வருமுன்னரே கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர். தற்போது செங்கல்பட்டு பகுதியில் உள்ள படாலம் பகுதியில் அவரை கைது செய்துள்ளனர்.