'ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா...' 'பத்து மாத குழந்தைக்கும் பாசிட்டிவ்...' மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 14, 2020 06:23 PM

ஹைதராபாத்தில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Corona is confirmed in 17 people belonging to the same family

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தொடவுள்ளது. இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை சுமார் 10,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைத்து கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற்றம் அடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைளை எடுத்தி வருகிறது. மேலும் சளியோ, காய்ச்சலோ அல்லது இருமல் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, நோய் உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து இவர்களிடம் தொடர்பிலிருந்த 24 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வரும்  காந்தி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்த 17 பேரில் 10 மாத குழந்தையும் உள்ளது என்ற வருத்தமான செய்தியையும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 24 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நெகடிவ் என்றாலும் மேலும் சில நாட்களுக்கு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்ததால் சார்மினார் அருகிலுள்ள அரசு நிஜாமியா பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது இவர்கள் வசித்து வந்த முழு பகுதியையும் சீல் வைத்து அங்குள்ள மக்களையும் கண்காணித்து வருவதாகவும், இதை ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.