‘தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா!’.. ‘அதைவிட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோர்!’.. நம்பிக்கை தரும் செய்தி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 14, 2020 07:24 PM

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். 

new COVID19 cases in Tamil Nadu, State Health Secretary Beela Rajesh

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19,255 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதில் இன்று மட்டும் 6509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இன்றைய தினம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.