"நோய் நொடிகளால் பயம் அதிகரிக்கும்..." 'மீனாட்சி அம்மன்' கோயில் 'பஞ்சாங்க கணிப்பு' பலித்தது... 'சார்வரி' ஆண்டுக்கான 'பஞ்சாங்கம் இன்று வாசிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, விகாரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிப்பின் போது கணிக்கப்பட்ட சம்பவங்கள் தற்போது உண்மையாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் இன்று வாசிக்கப்பட்டது.

மீதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தமிழ்ப்புத்தாண்டு சித்திரை பிறப்பை முன்னிட்டு, ஆண்டு தோறும் பாரம்பரியமாக, சுத்த வாக்கிய பஞ்சாங்கம் வாசித்து ஆண்டு கணிப்புகள் குறித்து அறிவது வழக்கம். அந்த வகையில் சித்திரை பிறப்பான இன்று (ஏப்.,14) சார்வரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த 2019 ஏப்ரல் 14ல் விகாரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அப்போது, 'விகாரி வருஷத்தின் பலனாக, "மழை அதிகம் இருக்காது. பெய்யும் மழையில் பத்து மடங்கு கடலிலும், ஆறு மடங்கு மலைகளிலும், நான்கு மடங்கு நிலத்திலும் பெய்யும். விவசாயம் நடுத்தரமாக இருக்கும். நோய் நொடிகளால் பயம் அதிகம் உண்டாகும். சம்பாதிக்க வழியின்றி இருப்பதை விற்று உண்ண வேண்டி வரும்,' என கணிக்கப்பட்டது.
இந்நிலையில், விகாரி பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட பலன்கள் தற்போது நிறைவேறி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். பொருளாதாரமும் வெகுவாக சரிந்துள்ளது. பல கோடி பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். மக்கள் நோய் பயத்தால் வீட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இவை அணைத்தும் விகாரி பஞ்சாங்கத்தில் கணித்ததுபடி நடந்துள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்திரைப் பிறப்பான இன்று சார்வரி ஆண்டு பஞ்சாங்கம் இக்கோயிலில் காலை 8:30 மணிக்கு வாசிக்கப்பட்டது. இது விரைவில் வெளியிடப்படும்.
இதையொட்டி இந்த ஆண்டு பலன் சிறப்பாக அமைய வேண்டும், என அம்மன், சுவாமிக்கு தங்க கீரிடம், தங்கப்பாவாடை சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டது.
