காலை முதல்வர் தலைமையில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்ற எம்எல்ஏ-க்கு மாலை கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் மாநில அரசு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 15, 2020 06:29 AM

குஜராத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Gujarat MLA tests Covid19 positive after meeting CM Vijay Rupani

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலரும் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அகமாதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சீல் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவாலவுக்கு நேற்று மாலை கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குஜராத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கு கொரோனா பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.