‘இப்டியொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது’!.. கேட்பாரற்று கிடக்கும் ‘சடலங்கள்’.. நெஞ்சை ரணமாக்கிய போட்டோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கேட்பாரற்று கிடக்கும் போட்டோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,50,000 ஐ தாண்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1509 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக 24 மணிநேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1514 ஆக இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கேட்பாரற்று கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டெட்ராய்டு நகரில் உள்ள மருத்துவமனையில் காலியாக இருக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலையில் நீண்ட தொலைவுக்கு வரிசையாக நின்ற புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் புகைப்படம் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.