'ஒரே நாளில் கிடைச்ச மரண அடி'...'வல்லரசு நாடுன்னு மட்டும் சொல்லாதீங்க'...நிலைகுலைந்த அமெரிக்க மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ள சம்பவம் அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியின் விளிம்பில் தள்ளியுள்ளது.
உலகமே எதிர்பாராத பெரும் அழிவை தற்போது கொரோனா நிகழ்த்தி கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என பலரும் ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியானவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 228 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்கள் அமெரிக்க மக்களை அதிர்ச்சியின் விளிம்பில் தள்ளியுள்ளது. வல்லரசு நாடக இருந்து என்ன பயன், தங்களின் கண் முன்பே சாகும் தங்களது சொந்தங்களை காப்பாற்ற முடியவில்லையே என அமெரிக்க மக்கள், தங்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.