#COVID19: “சொந்த ஊருக்கு அனுப்புங்க!”... ஊரடங்கு நீடித்ததால் ஒரே இடத்தில் கூடிய 1000 பேர்.. ‘தடியடி நடத்திய போலீஸார்!’.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 14, 2020 08:51 PM

மும்பையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி  ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டமாக ஒரே இடத்தில் கூடினால் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ள சூழலில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Lathicharged By Cops Over Thousands Defy Lockdown in Mumbai

இந்தியாவில் வெகுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த 21 நாட்கள் ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு திரும்பிவிடலாம் என்று பல தொழிலாளர்கள் நினைத்துக்கொண்டிருந்துள்ளனர். ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளியூருக்கு செல்ல முடியாத அதிருப்தியில், மும்பையின் மகாராஷ்டிராவின் பந்த்ரா ஸ்டேஷனில் கூட்டமாக கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்தியதை, அடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மகாராஷ்டிராவில்தான்

அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.