‘போதையில் பயணமுங்க பாதையில் மரணமுங்க’.. சாலை பாதுகாப்பு குறித்து போலீஸ் பாடிய பாடல்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 05, 2019 12:39 PM

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி காவலர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Police man sung emphasis road safety in Cuddalore

கடலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து அம்மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அருகே உள்ள மருதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் காவலர் பொ.சிவபெருமாள் என்பவர் சாலை விதிகளை மதிப்பது குறித்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அதில்,  ‘சாலை விதிகளை மதித்துதான் ஓட்டு, சாவே இல்லாமல் வாழ்ந்துதான் காட்டு, செல்போனில் பேசிக்கிட்டே வாகனத்தை நீ ஓட்டாதே.. ஓடும் பேருந்தில் ஓடிப்போய் ஏறாத’ என்ற பாடல் வரிகள் அடங்கிய விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இது சமூகவலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Tags : #TAMILNADUPOLICE #POLICE #CUDDALORE #ROADSAFETY #SUNG #SONG