'15 வருஷமா கோவிலே கதி'.. 'இறந்த பிச்சைக்காரரிடம் இருந்த பணம்'.. 'இவ்வளவா?'.. விழிபிதுங்கிய போலீஸார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 26, 2019 08:07 PM

ஆந்திராவில் பிச்சை எடுத்து வந்த ஒருவரிடம் இருந்து 1 கோடியே 83 லட்ச ரூபாய் பணத்தை போலீஸார் எடுத்துள்ளனர்.

Andhra Pradesh Police found 1.83 lakh from a dead beggar

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திர வரத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் உள்ளது உமா மார்க்கண்டேஸ்வரர் கோயில். இந்த கோவிலில்தான் கடந்த 15 வருடங்களாக காஞ்சி நாகேஸ்வர ராவ் என்பவர் பிச்சை எடுத்தும் வந்துள்ளார். இவர், இங்குள்ள கோவிலுக்கு வருபவர்கள் பணமாகவோ, உணவாகவோ கொடுப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து, அவர் ஆதரவற்றவர் என்பதால், போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வந்த போலீஸார், அவரின் பைகளில் அங்கங்கே இருந்த பணத்தையெல்லாம் எண்ணியுள்ளனர்.

இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில், 1 கோடியே 83 லட்சம் ரூபாய் அவரிடம் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ந்துள்ளனர். அதன் பின், அதில் 3000 ரூபாய் எடுத்து அவரின் இறுதிச்சடங்கை நடத்திய போலீஸார், மீதமுள்ள பணத்தை கோவில் சார்பாக ஆதரவற்றோர்களுக்கான அன்னதானம் மற்றும் நலவாழ்வுத் திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் பணத்தை எண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #ANDHRAPRADESH #POLICE #VIRAL #BEGGAR