'தள்ளி நில்லுயா.. ஒட்டிக்கும்'.. 'நாளைக்கு சாவப் போறவனலாம்'.. 'விஜய்' பட இயக்குநர் வேதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 27, 2019 04:39 PM

நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த திருமலை படத்தை இயக்கியவர் ரமணா. இதனை அடுத்து விஜய் நடித்த ஆதி திரைப்படத்தை இயக்கியதும் இவரே. தொடர்ந்து தனுஷை வைத்து சுள்ளான் உள்ளிட்ட படங்களை இயக்கிவந்த இயக்குநர் ரமணா, அதன் பின்னர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

film director accuses chennai traffic PS for ill treating

தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில்ல், இயக்குநர் ரமணா, தனது மகளின் பிறந்த நாளுக்காக தன் மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, டிராஃபிக் காவலர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பதிவு ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதன்படி, பட்டினப்பாக்கம் சிக்னலில் யூடர்ன் எடுக்கும்போது சிக்னல் பச்சையில் இருந்து சிவப்புக்கு மாறியதாகவும், உடனே டிராஃபிக் போலீஸார் விதிகளை மீறியதாகச் சொல்லி தன் காரை நிறுத்தச் சொல்லி, அபராதம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த டிராபிக் காவலர் ராமர், ரமணாவின் லைசன்ஸை வாங்கி, மற்றொரு டிராஃபிக் காவலர் குமாரிடம் கொடுத்துள்ளார். குமார் அபராதம் விதிக்க முயற்சித்தபோது, ரமணாவோ, ‘நான் எனக்கு வண்டி ஓட்ட தகுதி இருப்பதற்கான அத்தாட்சிக்காக மட்டுமே லைசன்ஸை காட்டினேன், அபராதம் விதிக்க அல்ல’ என்று கூறியுள்ளார்.

அப்போது டிராபிக் காவலர் குமார்,  ரமணாவைப் பார்த்து,‘ஏய் தள்ளி நில்லு.. உன் எச்சில் என் மேல பட்டுட போகுது’ என்று தான்(ரமணா) கேன்சரால் பாதிக்கப்பட்டதை அறிந்தும், தன்னைப் பார்த்து இவ்வாறு கூறியது தனக்கு வேதனை அளித்ததாகவும், தன்னை அழைத்துச் சென்ற காவலர் M.ராமரிடம், ‘பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று காவலர் குமார் கூற, ரமணா அவரிடம் ‘நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய மயிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு’ என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேசியதாகவும், கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட...வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உன்மையை உணர்ந்து தஎன்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்ததாகவும் ரமணா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரமணா குறிப்பிட்டுள்ளவை:

அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒருஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்...

ஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தான் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.

அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோனமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை. குறிப்பாக கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாறென்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

Tags : #TRAFFIC #POLICE #FILM #DIRECTOR #VIJAY