'யுனிஃபார்ம்ல செய்ற காரியமா இது?'.. சர்ச்சையில் சிக்கிய போலீஸ்.. வைரலாகும் திருமண ஆல்பம் ஷூட்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 27, 2019 02:39 PM

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது திருமணத்துக்கான ஆல்பம் வீடியோ ஒன்றை உருவாக்கியதை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

cop gets bribe in uniform for his prewedding shoot

ராஜஸ்தானின் சட்டிகர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில்  ஸ்டேஷன் ஹவுஸ் போலீஸ் ஆபீசராக இருந்து வரும் தன்பாட் என்பவர், திருமணத்துக்கு முன்னதாக, தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணுடன் இணைந்து நடித்து ப்ரீ-வெட்டிங் ஆல்பம் ஷூட்டில் நடித்துள்ளார்.

அதில் போலீஸாக இருக்கும் அவரிடம், அவரின் வருங்கால மனைவி பைக் ஓட்டிக்கொண்டு வருவது போலவும், ஆனால், லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிவந்த அந்த பெண், மாட்டிக்கொண்டதால் இன்ஸ்பெக்டரிடம் தோப்புகரணம் போடுகிறார். ஆனால் அதன் பின், அந்த போலீஸ் லஞ்சம் வாங்குவதில் பிஸியாக இருக்கும்போது, இந்த பெண் அவரின் பர்ஸை ஆட்டய போடுகிறார்.

அதன் பின் அந்த பர்ஸை அந்த பெண் கொண்டு வந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கிறார் இருவருக்கும் காதல் மலருகிறது. இவ்வாறு எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் காவல் துறையினரை தவறாகக் காண்பித்திருப்பதால், தன்பாட்டின் மேலதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Tags : #POLICE #PREWEDDING #VIRALVIDEO