'கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க?'.. இளம் பெண்ணின் விபரீத முடிவு.. தாலி கட்டியதும், ஓட்டம் பிடித்த கணவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 06, 2019 03:58 PM

திருமணத்தை ஏற்காத ஆணை, கட்டாயப்படுத்தி பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்ததால், அந்த ஆண் தப்பிவிட்ட தகவல் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man made to marry after girl attempts suicide in pune

புனேவில், சக்காம் என்கிற  பகுதியில், பெண் ஒருவர், ஆண் நபர் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார். ஆனால் இந்த திருமண கோரிக்கையை, ஏற்க அந்த ஆண் மறுத்திருப்பதாகத் தெரிகிறது.  இதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலைக்கு முயற்சித்த அந்த பெண்ணை, புனேவில் உள்ள சக்காம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வைத்து, அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது பெண்ணின் தரப்பு. எனினும் இதனை விரும்பாத அந்த ஆண், அடுத்த சில மணி நேரங்களிலேயே தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி கருத்து பலரும், இப்படி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது முறையற்ற செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Tags : #SUICIDEATTEMPT #WEDDING #PUNE