‘பள்ளிக்கு போகச் சொல்லி கண்டித்த தாய்’.. 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..! சென்னையில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 27, 2019 02:17 PM

பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9th std school student commits suicide near Pallavaram in Chennai

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் அருகே கண்ணகி நகரை சேர்ந்தவர் பாலஜி. இவருடைய மகள் புஷ்பா (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் புஷ்பா சில நாட்களாக சரிவர பள்ளிக்கு செல்லாததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது தாய் புஷ்பாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சரிவர செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #SUICIDEATTEMPT #CHENNAI #PALLAVARAM #DIES