'கழுத்தை நெரித்த கடன்!'.. '2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தந்தையர் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 03, 2019 11:18 AM

தென்காசி மாவட்டத்தில் மகனைக் கொன்றுவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியலைகளை உண்டுபண்ணியுள்ளது.

TN couple killed their 6 years old son, then committed suicide

தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பில், வசித்து வந்த 6 வயது மகனைத்தான், தாய் தந்தையர் இருவரும் சேர்ந்த பெற்ற பிள்ளை என்றும் பாராமல் கொன்றுள்ளனர். தங்கள் மகனையே கொல்லத் துணிந்த பெற்றோர் அதன் பிறகு தாங்களும் தங்களை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதன் பொருட்டு இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியை அதிர வைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன குடும்பத்தலைவர் கந்தசாமி என்றும், அவரது மனைவி இசக்கியம்மாள் மகளிர் சுய உதவிக் குழுவில் பெற்ற கடனை அவர்கள் திரும்பக் கேட்கும்போது   சற்று கடுமையாக நடந்துகொண்டதால், ‘எங்கள் சாவுக்கு என் வறுமை மட்டும் காரணம்’  என்று சுவற்றில் ரத்தத்தால் எழுதிவைத்துவிட்டு கந்தசாமியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு, அனைவரும் தற்கொலைக்கு முயன்றதில், 2வது மகன் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வர, மற்றவர்கள் மரணத்தைத் தழுவினர். 

NOTE: Suicide is never an option for any problem. For people struggling from suicidal thoughts, here is a helpline of Sneha (Suicide Prevention) Centre - 044 2464 0050.

Tags : #SUICIDEATTEMPT #TENKASI