'பெட்ரூமில் 2 மகள்கள் கொலை'.. 'சுவரில் எழுதிவைத்துவிட்டு'.. '8வது மாடி பால்கனியில் இருந்து குதித்த குடும்பம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 03, 2019 12:44 PM

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் உள்ள இந்தியாபுரம் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து இரண்டு பெண்களும், ஒரு ஆண் நபரும் ஒரே சமயத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

family of 3 attempts suicide after killing their 2 daughters

இவர்களுள், பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய பெண் மட்டும் சிகிச்சைப் பிரிவில் போராடி வருகிறார். இறந்தவர்கள் 2 பேரும் கணவன், மனைவி என்றும், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண், இறந்து போன ஆணின் பிஸினஸ் பார்ட்னர் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி போலீஸார் விசாரிக்கும்போது குல்சன் வாசுதேவ் என்பவர் தன் மனைவி, பிஸினஸ் பார்ட்னரான பெண் மற்றும் தனது 2 மகள்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், இதனிடையே ராகேஷ் வர்மா என்பவர் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விஷயத்தில் குல்சன் வாசுதேவை ஏமாற்றிவிட்டதால், வேறு வழி தெரியாத அனைவரும் 8வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்து இந்த தற்கொலை முடிவினை எடுத்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்தத் தற்கொலைக்கு முன்னதாக, கணவர் குல்சன் வாசுதேவ் மற்றும் மனைவி இருவரும் தங்கள் இரு மகள்ககளும் தூங்கும்போது, அவர்களை பெட்ரூமிலேயே வைத்து கொன்றுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இதனை குல்சன் வாசுதேவ் தன் வீட்டு சுவரில் குறிப்பு போல் எழுதி வைத்திருப்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். மேற்கொண்டு விசாரித்தும் வருகின்றன்ர். 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.