என்ன கொடும சார் இது.. 'முன்வாசல் விழுப்புரத்துல'.. 'பின்வாசல் கள்ளக்குறிச்சியில'.. வியக்கவைக்கும் விநோதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 26, 2019 11:05 AM

காலங்காலமாக அரசுகளும், பிராந்தியங்களும் மாறுகின்றன. தவிர நிலங்களும் மனிதர்களும் மாறுவதில்லை என்கிற உண்மையை தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஒன்றில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் நிரூபித்துள்ளது.

onside of house in one district while backside in another

ஆம், ஒரு தெருவில் இருக்கும் வீடுகளின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டமாகவும் பின்பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும் இருக்கும் அவலம் நேர்ந்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து மிக அண்மையில்தான் கள்ளக்குறிச்சி தனியாக 8 தாலுகாக்களுடன் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமாக்கப்பட்டது.

இதில் கருவேப்பிலைப் பாளையம் என்கிற கிராமத்தின் வீடுகள்தான் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளன. இதனால் ஒரே வீட்டின் முன்வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும் பின்வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கிராமம் திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய 2 போலீஸ் ஸ்டேஷன்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகின்றன.

மேலும் வருவாய் அலுவலகம், கிராமப் பஞ்சாயத்து நிர்வாக அலுவகம் என எல்லாவற்றிலும் சரியான விபரங்களைத் தர முடியாமல் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இதில் அரசு தலையிட்டு ஒடு முடிவை அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : #VILLUPURAM #KALLAKKURICHI #DISTRICT