சென்னை: தேர்தல் பரப்புரையில் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சர்...! மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள்... - விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பணிபுரியும் ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (31.3.2021) சென்னை சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் முதலீடுகள் அதிகளவில் வருகின்றன. முதலீடுகள் அதிக அளவில் இருப்பதால் தான், ஐடி உள்ளிட்ட பெருநிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும், சென்னையைப் பொருத்தவரை ஐடி நிறுவனங்களின் அடையாளமாக சோழிங்கநல்லூர் உள்ளது. அப்பகுதியில் சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐடி நிறுவன ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
சிறப்பான ஆட்சி நடப்பதால் புதிய முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர் என்றும், இதனால் நேரடியாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
