‘தமிழக விவசாயிகளுக்கு அரணாக திகழும் அதிமுக’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பெருமிதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக விவசாயிகளுக்கு அதிமுக அரசு அரணாக திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து குன்னூரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் 1,500 மற்றும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதாக குற்றம்சாட்டிய முதல்வர் பழனிசாமி, தேர்தலில் திமுகவினருக்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என கூறினார்.
அதிமுக ஆட்சியில் மின்பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியிருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

மற்ற செய்திகள்
