தகாத உறவு... பாலியல் 'வன்கொடுமை'... பெண் கொலையில் 'திடுக்கிடும்' திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 15, 2019 12:38 AM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் விவசாய பணிகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த வியாழனன்று மாலை ராதா தங்களுடைய வயலுக்கு பாசிப்பயறு பறிக்க சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

Women Murdered near Aruppukottai, police arrested 3 persons

இதனால் கனகராஜ் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து ராதாவை தேடினர். தொடர்ந்து காவல்துறையிலும் தகவல் அளிக்க, போலீசார் மோப்ப நாயுடன் இரவு முழுவதும் ராதாவை தேடியுள்ளனர். அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து மறுநாள் காலை(வெள்ளிக்கிழமை) சோளக்காட்டில் ராதா கழுத்தறுபட்டு சடலமாக கிடந்தார்.

ராதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பாலியல் பலாத்காரம் எதுவும் செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த ஊரைச்சேர்ந்த அழகர்சாமி என்பவரை போலீசார் விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதே ஊரைச்சேர்ந்த சோலையப்பன் என்பவருக்கும், ராதாவுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேபோல சம்பவம் நடந்த அன்றும் ராதா, சோலையப்பனை சந்தித்து இருக்கிறார். அப்போது இதைப்பார்த்து விட்ட அழகர்சாமி தன்னுடைய நண்பர்கள் நாகநாதன், முத்துச்சாமி இருவருடனும் சேர்ந்து ராதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் கத்தி கூச்சலிட்டதால் ராதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் இதை வெளியே சொன்னால் உனக்கும் இதுதான் கதி என சோலையப்பனையும் மிரட்டியுள்ளனர். இதனால் சோலையப்பன் பயந்து போய் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கிறார். தற்போது சோலையப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அழகர்சாமி, நாகநாதன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.