VIDEO: ‘அசுர வேகத்தில் பைக் மீது மோதிய கார்’! காருக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்’.. பதறவைத்த சிசிடிவி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 15, 2019 11:58 AM

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி நபர் ஒருவரை தரதரவென இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car crashes into bike one man dragged on road in Raipur

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே இரவு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். அப்போது சாலையில் அதிகவேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒருவர் சாலை ஓரமாக தூக்கி வீசப்பட்டார். மற்றொரு நபர் காருக்கு அடியில் சிக்கியிருந்துள்ளார்.

அப்போது சிறிது நேரம் நின்ற கார் வேகமாக அந்த நபரை தரதரவென சாலையில் இழுந்து சென்றுள்ளது. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #ACCIDENT #CRIME #RAIPUR #CAR #BIKE