'மகனையும், பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா'...'தலைக்கேறிய ஆத்திரம்'... நொடியில் முடிஞ்ச கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 16, 2019 02:13 PM

ஒரு நிமிட ஆத்திரத்தில் மருமகளை, மாமியாரே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman kills daughter-in-law with a flower pot in Vasai

மகாராஷ்டிரா மாநிலம் மானிக்புர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவருடைய மகன் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆரியா என்ற பெண்ணிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த ஆனந்தி, திருமணமாகி வந்த மருமகள் ஆரியா, தன்னிடம் இருந்து மகனையும், பேத்தியையும் பிரித்து விட்டதாக நினைத்துள்ளார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினர் எல்லோரும் அமெரிக்காவுக்கு சென்று திரும்பி வந்து உள்ளனர். அப்போது அங்கு வேலை பார்த்து வரும்  ஆனந்தியின் மகனும், சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.  அமெரிக்கா சென்று வந்ததில் இருந்து மீண்டும் மாமியாருக்கும், மருமகளிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அது தொடர்ந்து கொண்டே செல்ல, நேற்று காலையில் ஆனந்தியின் மகன் நடை பயிற்சிக்கு சென்று உள்ளார்.

அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டை வெடிக்க, ஆத்திரமடைந்த மாமியார் ஆனந்தி வீட்டில் இருந்த பூந்தொட்டியை எடுத்து மருமகளின் தலையில் அடித்தார். தலைக்கேறிய ஆத்திரத்தில் சற்றும் யோசிக்காமல் ஆனந்தி செய்த செயலால் சம்பவ இடத்திலேயே ஆரியா பலியானார். இதையடுத்து ஆனந்தி மாணிக்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் விரைந்து சென்று ஆரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்திற்குள் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளை பேசி தீர்க்காமல், ஒரு நிமிட ஆத்திரத்தில் ஆனந்தி செய்த செயல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #KILLED #POLICE #DAUGHTER-IN-LAW #FLOWER POT #VASAI