‘பேனாவுக்காக தோழியை கொலை செய்த பள்ளி மாணவி’!.. ‘விசாரணையில் சிக்கிய பெற்றோர்’.. பகீர் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 15, 2019 01:15 PM

ஜெய்ப்பூர் அருகே பேனாவை பறித்ததற்காக சக மாணவியை பள்ளி மாணவி அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School girl kills classmate over snatching pen in Jaipur

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சக்சு பகுதியில் உள்ள படாலி என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் பயல் (12) என்ற சிறுமி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அதே பள்ளியில் பயின்று வந்த 10 வயது சிறுமி பயலிடமிருந்து பேனாவை பறித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து பேனாவை வாங்குவதற்காக பயல் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த சமயம் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்துள்ளனர். பேனா வாங்குவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பயல் அருகில் இருந்த இரும்பு கம்பியால் அந்த மாணவியை அடுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்கு வந்த பயல் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே பயலின் தாய் உயிரிழந்த சிறுமியின் உடலை மூட்டையில் கட்டி அருகில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். பின்னர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் குட்டையில் இருந்த சிறுமியின் சடலத்தை வெளியே எடுத்து ஊருக்கு வெளியே புதைத்துள்ளார்.

இதனிடையே சிறுமியை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பேனாவுக்காக ஏற்பட்ட தகராறில் சக வகுப்பு மாணவியையே சிறுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவியின் உடலை மீட்டுள்ளனர். பேனாவுக்காக சக வகுப்பு மாணவியால் மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #SCHOOLSTUDENT #JAIPUR #SNATCHING #PEN #SCHOOLGIRL