'வெள்ளை சட்டை.. தொப்பி.. சைக்கிள். யாருப்பா இவரு??'.. 'மாஸ் காட்டிய' செயல்.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 29, 2019 03:00 PM

சைக்கிளை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Telangana Collector cycles to Hospital for a surprise visit

தலையில் வெள்ளைத் தொப்பி, வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட் சகிதமாக, தெலுங்கானாவின் நிசாபாத் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த நபர் ஒருவர் அங்கிருந்த நோயாளிகளிடம் எதையோ பேசி விசாரித்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், அங்குள்ள குடிநீர் சுகாதாரமாக இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்குள், ‘யாருப்பா இவரு? என்று பேசிக்கொண்டபோதுதான்,  ‘அவர்தான்பா நிசாம்பாத் மாவட்ட ஆட்சியர் நாராயண ரெட்டி’ என்று தெரியவந்தது.

சைக்கிளில் சாதாரணமாக வலம் வந்த இவர், அங்குள்ள நிசாம்பாத் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரின் பணி சிரத்தை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் மற்றும் சுகாதாரமான முறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, இதில் சிக்கிய பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுமுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், ஏற்கனவே நன்றாக செயல்படத் தொடங்கியிருக்கும் நிசாம்பாத் மருத்துவமனையை இன்னும் முறைப்படுத்தவே இம்மாதிரியான முயற்சிகள் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் மக்களிடம் எளிமையான முறையில் சென்று, அவர்களின் குறைகளை கேட்டுத் தீர்க்கும் இந்த் ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Tags : #COLLECTOR